இசைஞானி இளையராஜாவின் மகளின் மறைவு! பல தலைவர்கள் அஞ்சலி
தென்னிந்திய இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் நேற்று காலமானார்.
தென்னிந்திய இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் நேற்று காலமானார்.
இந்நிலையில் அவரது மறைவுக்கு பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இசையமைப்பாளர் இளையராஜா மகளும், பிரபல பின்னணி பாடகியுமான பவதாரணி அவர்கள் உடல் நலக்குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
இசைஞானி இளையராஜாவின் அன்பு மகள் பின்னணி பாடகி சகோதரி பவதாரணி, உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தனித்தன்மையுடன் கூடிய குரலால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த அவரது மரணம், தமிழ் இசை உலகிற்கு பேரிழப்பாகும். அவருடைய மரணத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.
பிரபல திரைப்பட இசையமைப்பாளர் 'இசைஞானி' இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரணி ராஜா அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன் என தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.