அப்பிள் நிறுவனத்தின் புதிய மென்பொருள் வடிவம்

புதுப்பிக்கப்பட்ட மென்பொருளான ஐஓஎஸ் (iOS) 18யினை அப்பிள் நிறுவனம் தனது நிறுவனத்தின் வருடாந்த மென்பொருள் பொறியியலாளர்களின் மாநாட்டில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், குறித்த மாநாடானது எதிர்வரும் ஜூன் மாதம் இடம்பெறவுள்ளது.

மேலும், இந்த மென்பொருளானது அப்பிள் நிறுவனத்தின் வரலாற்றின் மிகப்பெரிய அடைவாக இருக்கும் என்றும், இது அப்பிள் நிறுவனத்தின் நீண்ட கால இலட்சியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அந்தவகையில், புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்பை மேம்படுத்திய பதிப்பாக Siri ஐ இந்த மென்பொருள் கொண்டுள்ளது. Siri மற்றும் Messages ஆகிய இரண்டு செயலிகளும் வாக்கியங்கள் மற்றும் கேள்விகளை எவ்வாறு தானாக முடிக்க முடியும் என்பதை மேம்படுத்தும் புதிய அம்சங்களை அப்பிள் அறிமுகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.