இலங்கை -ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இரண்டாம் நாள் ஆட்டம் இன்று
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.
போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் உள்ளது.
இந்நிலையில் இலங்கை அணியின் நிஷான் மதுஷங்க 36 ஓட்டங்களுடனும் திமுத் கருணாரத்ன 42 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது உள்ளனர்.
முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.