பாணின் நிகர எடை மாறினால் அபராதம்!
சந்தையில் பாண் உரிய நிறையில் விற்பனை செய்யாத வர்த்தகர்களுக்கு எதிராக 10 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும்.
சந்தையில் பாண் உரிய நிறையில் விற்பனை செய்யாத வர்த்தகர்களுக்கு எதிராக 10 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நீரியெல்ல தெரிவித்துள்ளார்.
பாண் இறாத்தல் ஒன்றின் நிகர எடை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் வெளியிடப்பட்டதையடுத்தே இந்த திட்டம் கொண்டுவரப்படவுள்ளது.
அதன்படி, பாண் இறாத்தல் ஒன்றிற்காக 450 கிராம் என்ற நிகர எடை காட்சிப்படுத்தப்பட வேண்டுமென அந்த சபையினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஒரு இறாத்தல் பாணிற்கான நிகர எடையில் 13 கிராம் வித்தியாசம் மாத்திரமே காணப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைதொடர்ந்து அரை இறாத்தல் பாணிற்கான நிகர எடை 225 கிராமாக இருத்தல் அவசியம் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.