ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இன்று போட்டி 

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறுகின்றது.

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இன்று போட்டி 

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறுகின்றது.

தம்புள்ளையில் இடம்பெறும் இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக, சதீர சமரவிக்ரம 51 ஓட்டங்களையும், அஞ்சலோ மெத்யூஸ் 42 ஓட்டங்களையும், பெத்தும் நிஸ்ஸங்க 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.