உங்கள் ராசிக்கு இன்று என்ன பலன்?

குடும்பத்தாருடன் அன்பாக பணிவாக இருக்கும் நாள்.

உங்கள் ராசிக்கு இன்று என்ன பலன்?

மேஷம்

குடும்பத்தாருடன் அன்பாக பணிவாக இருக்கும் நாள்.

கை மாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். 

தோற்றப் பொலிவு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புது நட்பு மலரும். 

பழைய சிக்கலில் ஒன்று தீரும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். தடைகள் உடைபடும் நாள்.

ரிஷபம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும்.

நீங்கள் எதை பேசினாலும் அதை எல்லோரும் தவறாக புரிந்து கொள்வார்கள். 

உடல் வலி பிரச்சினைகள் காணப்படும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். 


மிதுனம்

உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

கணவன்-மனைவிக்குள் வீண் விவாதம் வந்து செல்லும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும்.

சகோதர வகையில் மனஸ்தாபங்கள் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். 


கடகம்

குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

 நண்பர்களால் ஆதாயம் பெருகும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். 

உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். இனிமையான நாள்.


சிம்மம்

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். 

குடும்பத்தில் பிரச்னைகள் நீங்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள் வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். 

பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


கன்னி

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். 

வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். 

தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.


துலாம்

சந்திராஷ்டமம் இருப்பதாக திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். 

வாகனங்கள் வாங்கும் சாத்தியம் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. 

நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.


விருச்சிகம்

உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். 

சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த மின்னணு மின்சார பொருட்கள் வாங்குவீர்கள். 

வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். தாய் வழியில் ஆதரவுப் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

தனுசு

சமயோசிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். 

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. 

எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். 

உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள். அமோகமான நாள்.


மகரம்

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற் கொள்வீர்கள். 

அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும். 

செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். 

உத்தியோகத்தில் சக ஊழியர்களால் இருந்த பிரச்னைகள் விலகும். கனவு நனவாகும் நாள்.


கும்பம்

முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். 

தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். 

புது வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியம் இன்று முடியும். 

பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். 

உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


மீனம்

குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். 

பிரபலங்களின் நட்பு கிடைக்கும். 

சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். 

வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும். தைரியம் கூடும் நாள்.