45 ஆண்டுகளின் பின்னர் பூமியை கடந்து செல்லவுள்ள அதிசயம்

 45 ஆண்டுகளின் பின்னர் ஒரு சிறுகோள் ஒன்று இன்று (24) பூமியை கடந்து செல்லவுள்ளதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது.

 45 ஆண்டுகளின் பின்னர் பூமியை கடந்து செல்லவுள்ள அதிசயம்

45 ஆண்டுகளின் பின்னர் ஒரு சிறுகோள் ஒன்று இன்று (24) பூமியை கடந்து செல்லவுள்ளதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் 2021 BL3 என்ற இந்த சிறுகோளானது இதற்கு முன்னர் 1979 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதியன்று பூமியை  கடந்து சென்றதாகவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் இன்று குறித்த சிறுகோளானது 6.6 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பூமியைக் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய நாளின் பின்னர் இதே சிறுகோள் மீண்டும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதியன்று, சுமார் 24 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பூமியை கடந்து செல்லும் எனவும் ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.

இந்த சிறுகோளானது தற்போது பூமியை நோக்கி அதன் சுற்றுப்பாதையில் மணிக்கு 84,220 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துக்கொண்டு இருப்பதாகவும், இது பெரும்பாலான விண்வெளி விண்கலங்களின் வேகத்தைக் காட்டிலும் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 45 அடி அகலம் கொண்ட ஒரு சிறுகோள் சுமார் 3 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பூமியை கடந்து சென்றதாக நாசா அறிவித்திருந்த நிலையில் இன்றும் ஒரு சிறுகோள் பூமியை கடந்து செல்லவுள்ளதை நேற்று அறிவித்திருந்தது.

பூமியை கடந்து செல்லும் இவ்வாறான சிறுகோள்களின் கூட்டமானது பூமிக்கு அருகில் உள்ள சிறுகோள்களின் அப்பல்லோ குழுவைச் சேர்ந்தது எனவும் அவை பூமியை விட பெரிய அரை-பெரிய அச்சுகளைக் கொண்டவை எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.