நாட்டின் பல பகுதிகளில் நாளை கடும் வெப்பம்

நாளை நாட்டில் அதிகளவு வெப்பநிலை நிலவும் என தெரிவிக்கப்படுகின்றது

நாட்டின் பல பகுதிகளில் நாளை கடும் வெப்பம்

நாளை நாட்டில் அதிகளவு வெப்பநிலை நிலவும் என தெரிவிக்கப்படுகின்றது. 

அதாவது அதி வெப்பத்துடனான வானிலை நாளைய தினம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, வடமேல், தெற்கு, மாகாணங்களிலும், இரத்தினபுரி, அநுராதபுரம், மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் அதி வெப்பத்துடனான வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் மனித உடலுக்கு உணரும் அளவிற்கான வெப்பம் காணப்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

எனவே போதுமான அளவு நீர் அருந்துவது, முடிந்தவரை நிழலாடிய இடங்களில் ஓய்வெடுப்பது, கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது போன்ற சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.