வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் கைது

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர்  ஆலய பூசகர்  மதிமுகராசா சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். 

வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் கைது

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர்  ஆலய பூசகர்  மதிமுகராசா சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நாளைய தினம் சிவராத்திரி விழா ஏற்பாடுகளை செய்த வேளையிலேயே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் கோயில் சிவராத்திரி விழா ஒழுங்குபடுத்தல்களுக்கு சென்ற பூசகரையும் நாளைய தேவைகளுக்காக எடுத்துச்செல்லப்பட்ட தோரணங்கள், வாழை மரங்கள், தண்ணீர்  பெளசர் போன்றவற்றை  பொலிஸார் தடுத்துவைத்திருந்தனர். 

பின்னர் ஒழுங்குபடுத்தல்களுக்கு சென்றவர்களின் தேசிய அடையாள அட்டைகள், சாரதி அனுமதி பத்திரங்கள், தொலைபேசிகள் போன்றனவும் பொலிஸாரால்  பறிக்கப்பட்டிருந்தது. 

இந்தநிலையிலேயே பூசகர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர்  தெரிவித்துள்ளனர்.