இலங்கையை உலுக்கும் சம்பவம்! தாயை கொடூரமாக தக்கி கொலை செய்த மகன்
கண்டி - நாவலப்பிட்டி பகுதியில் தாயின் விலா எலும்புகளும் உடையும் அளவிற்கு அடித்து கொலை செய்த மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்டி - நாவலப்பிட்டி பகுதியில் தாயின் விலா எலும்புகளும் உடையும் அளவிற்கு அடித்து கொலை செய்த மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாவலப்பிட்டியில் வசித்து வந்த எஸ்.செல்லமாஇரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
கம்பளை பொலிஸ் பிரிவில் இரண்டு வாரங்களுக்குள் தாயார் தனது மகன்களால் அடித்துக் கொல்லப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
இந்நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியரான ருச்சிரா நதீரா, பிரேத பரிசோதனையின் போது, தனது இளைய மகனின் தாக்குதலால் தாயின் தலையில் பல காயங்கள், தாடை எலும்பு மற்றும் 22 விலா எலும்புகள் முறிந்துள்ளதாக தெரிவித்தார்.
சந்தேக நபர் இதற்கு முன்னர் தனது தந்தையை தாக்கி தலையில் காயம் ஏற்படுத்தியிருந்ததால் தந்தை தமது மூத்த மகளின் வீட்டிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 17ஆம் திகதி, அவரது மனைவியும் தாக்கப்பட்டதால், குழந்தையையும் அழைத்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
சந்தேகநபர் தனது தாயுடன் வீட்டில் தங்கியிருந்த நிலையில் பல்வேறு குழப்பங்களை மேற்கொண்டுள்ளார்.
தனது தாயை அடித்து வீட்டுக்குள் வைத்து கதவை பூட்டிவிட்டுயுள்ளார்.
பின் வீடு திரும்பி கதவை திறந்து பார்த்த போது தாய் இறந்து கிடப்பதை கண்டு அயலவர்களிடம் தகவல் தெரிவித்தார்.
சுகயீனமுற்ற தாய் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்த சந்தேக நபர், மரணத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து, நாவலப்பிட்டி வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரேத பரிசோதனையை மேற்கொண்ட போது, தாக்குதலினால் ஏற்பட்ட பல காயங்களினால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தாயை தாக்கியதை ஒப்புக்கொண்டுள்ளதாகவும், தனக்கு சூனியம் செய்ததால் சுமார் ஒரு வருடமாக தாயாருடன் கோபமாக இருந்ததாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.