கைதிகளை பார்வையிட தைப்பொங்கலன்று விசேட சலுகை

அனைத்து சிறைச்சாலைகளிலும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி

கைதிகளை பார்வையிட தைப்பொங்கலன்று விசேட சலுகை

நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறையில் தண்டனைகளை அனுபவித்து வரும் இந்து மத சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பீ. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் தைப்பொங்கல் தினத்தில் சிறைக்கைதிகளுக்கு உணவுப்பொதிகள், இனிப்புகளை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலைகளில் காணப்படுகின்ற சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக குறித்த உணவுகளை சிறைக்கைதிகளின் உறவினர்கள் வழங்க முடியும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பீ. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.