முன்னாள் தவிசாளரின் மகிழுந்தில் மோதுண்டு ஒருவர் பலி

தம்புள்ளை - பல்வெஹர பகுதியில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் ஆரியவதி கலப்பத்தி பயணித்த மகிழுந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முன்னாள் தவிசாளரின் மகிழுந்தில் மோதுண்டு ஒருவர் பலி

தம்புள்ளை - பல்வெஹர பகுதியில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் ஆரியவதி கலப்பத்தி பயணித்த மகிழுந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த வீதியை கடக்க முற்பட்டபோது இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மாத்தளை நாவுல பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மகிழுந்தின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.