ஆசிரியையான தனது மனைவியின் கால்களை வெட்டிக் காயப்படுத்திய கணவர் தலைமறைவு..!
காலி - மெதவலவில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கணவர் தனது மனைவியின் இரு கால்களையும் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு காயமடைந்தவர் பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றும் 34 வயது பெண்ணாவார்.
கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு எல்லை மீறியதில் கணவன் தனது மனைவியின் இரு கால்களையும் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து கணவர், வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கையடக்கத்தொலைபேசியை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் சில காலங்களாக இராணுவ வீரராக கடமையாற்றியுள்ள நிலையில் உத்தியோகபூர்வமற்ற முறையில் இராணுவ பணியில் இருந்து வெளியேறியுள்ளதுடன் ரத்கம பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.