பிரான்ஸ் விசா தொடர்பில் வெளியான தகவல்
பிரான்ஸ்க்கான விசா தொடர்பில் பிரான்ஸ் அரசாங்கம் உத்தியோகப்பூர்வ அறிவிப்பொன்றைவெளியிட்டுள்ளது.
பிரான்ஸ்க்கான விசா தொடர்பில் பிரான்ஸ் அரசாங்கம் உத்தியோகப்பூர்வ அறிவிப்பொன்றைவெளியிட்டுள்ளது.
பிரான்ஸின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையிலேயே, இந்தஅறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாரீஸ் 2024 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஜூலை மாதம் 26 ஆம்திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி வரையும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 8 ஆம்திகதி வரையும் நடைபெறவுள்ளது.
இந்த போட்டிகளில் சுமார் 15 ஆயிரம் தடகள வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த வீரர்கள் அனைவரும் 206 தேசிய ஒலிம்பிக் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
அத்துடன், இவர்கள் 32 விளையாட்டுகளில் போட்டியிடவுள்ளனர். மேலும், 26 ஆயிரம் அங்கீகாரம் பெற்றபத்திரிகையாளர்கள் இந்த போட்டிகளை செய்தியாக்கவுள்ளதுடன், இதனை க்ணடுகளிக்க சுமார் 15 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் தயாராகியுள்ளனர்.
இந்த நிலையில், பிரான்ஸ்க்கு பயணம் செய்வோருக்கான விசேட விசாக்கள் தொடர்பில் அந்த நாட்டுஅரசாங்கம் அறிவிப்பொன்றை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் ஏனைய விளையாட்டுக்களில் பங்கேற்போருக்கு 90 நாள் வேலைவிசா வழங்கப்படவுள்ளது.