உக்ரைனுக்கு அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை
ரஷ்ய படையினர் தொடர்பில் உக்ரைனுக்கு அமெரிக்கா எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
ரஷ்ய படையினர் தொடர்பில் உக்ரைனுக்கு அமெரிக்கா எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அவ்டியீவ்கா நகரம்(Avdiivka City), ரஷ்ய படைகளால் கைப்பற்றப்படலாம் என்று எச்சரித்துள்ளது.
குறித்த பகுதியில் கடுமையான போர் நடைபெற்று வருவதாகவும் உக்ரைனின் வெடிமருந்து இருப்புகுறைவடைந்து வருவதகாவும் இதன்போது தெரியவந்துள்ளது.
அவ்டியீவ்கா நகரம் 2014ஆம் ஆண்டு முதல் போரின் மையப்புள்ளியாக இருந்து வருகிறது.
டோனெட்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள இந்த நகரம் முக்கிய தொடருந்து மையத்திற்கு அருகே உள்ளதுமற்றும் இரு தரப்பினருக்கும் குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில், அவ்டியீவ்கா நகரத்தை கைப்பற்றுவது கிழக்குப் போரில் ரஷ்யாவுக்கு மூலோபாய சாதகத்தைஅளிக்கும் மற்றும் மேலும் பிரதேச ஆதாயங்களுக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் தேசிய பாதுகாப்பு சபையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்க்பி அமெரிக்காவின்மதிப்பீட்டைத் தெரிவித்துள்ளதோடு, உக்ரேனின் வெடிமருந்து பற்றாக்குறை காரணமாக அவ்டியீவ்காபாதிக்கப்படக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.