நுரையீரலில் இருந்து அகற்றப்பட்ட கரப்பான் பூச்சி

இந்தியா - கேரள மாநிலத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றில் நபர் ஒருவரின் நுரையீரலில் இருந்து கரப்பான் பூச்சி ஒன்று வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ள சம்பவம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

குறித்த நபர் கடுமையான மூச்சுத் திணறல் காரணமாக கேரள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது நுரையீரலில் கரப்பான் பூச்சி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த நபரின் நுரையீரலில் பொருத்தப்பட்ட குழாய் மூலம் கரப்பான் பூச்சி வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி குறித்த நோயாளி தற்போது குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.