ஆசிய கண்டத்தின் அதிக சதுப்பு நிலப்பரப்பை கொண்ட நாடாக சீனா
ஆசிய கண்டத்தின் அதிக சதுப்பு நிலப்பரப்பை கொண்ட நாடாக சீனா பதிவாகியுள்ளது.
ஆசிய கண்டத்தின் அதிக சதுப்பு நிலப்பரப்பை கொண்ட நாடாக சீனா பதிவாகியுள்ளது.
இந்நிலையில், சீனாவின் சதுப்பு நிலப்பரப்பு 5 கோடியே 63 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டரை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை சீனத் தேசிய வனத் தொழில் மற்றும் புல்வெளி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசியாவின் அதிக சதுப்பு நிலப்பரப்பை கொண்ட நாடாக சீனா விளங்குவதோடு, உலகளாவிய ரீதியில் 4 ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.
இன்று உலகின் 28 ஆவது உலக சதுப்பு நில தினமாகும்.
’’சதுப்பு நிலம் மற்றும் மனித குலத்தின் நன்மை” என்பது இந்த ஆண்டுக்கான சதுப்பு நில தினத்தின் கருப்பொருளாகும்.
உலகில் 903 தேசிய சதுப்பு நிலப் பூங்காக்கள் நிறுவப்பட்டுள்ளன.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்கு பிந்தைய பத்து ஆண்டுகளில், சீனாவில் சுமார் 3400 சதுப்பு நிலப் பாதுகாப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
சுமார் 8 லட்சம் ஹெக்டர் சதுப்பு நிலங்கள் புதிதாக அதிகரிக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.