அரிச்சல்முனை கடற்கரையில் பிரதமர் மோடி வழிபாடு

அரிச்சல் முனை கடற்கரையில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி வழிபாடு செய்தார்.

அரிச்சல்முனை கடற்கரையில் பிரதமர் மோடி வழிபாடு

ராமாயணத்துடன் நெருங்கிய தொடர்புடைய தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி வழிபாடு செய்தார். பின்னர் கோதண்டராமர் கோயிலில் தரிசனம் செய்தார்.

இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ள நிலையில், 

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி 11 நாட்கள் விரதம் இருந்து, முக்கிய ஆன்மிகத் தலங்களில் வழிபாடு நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

3 நாட்கள் பயணமாக தமிழகத்துக்கு வந்த பிரதமர் மோடி கடந்த 19ஆம் திகதி சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.