மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடல்
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.
இந்த குழுக்கூட்டம் இன்று (22) இடம்பெறவுள்ளது.
அண்மையில் இலங்கை மின்சார சபை கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்கியது.
குறித்த முன்மொழிவு விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட்டு, பொதுமக்களின் கருத்துகளைப் பெற்ற பிறகு, பயன்பாட்டு ஆணைக்குழு தனது கருத்துக்களைச் சேர்க்கும்.
இதன்பின் 3 வாரங்களுக்கு பிரேரணை பகிரங்கப்படுத்தப்படும். அதன்பிறகு பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெறும்.
அதன் பின்னர் அனைத்து முன்மொழிவுகளையும் இணைத்து புதிய பிரேரணை இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.