கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை

வாழைச்சேனை – கூழாவடிச்சேனை பகுதியில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்ட பெண்ணொருவர் உயிரிழந்தார்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை

வாழைச்சேனை – கூழாவடிச்சேனை பகுதியில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்ட பெண்ணொருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.

பொலிஸ் ஊடகப்பிரிவு வெளயிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண், கூழாவடிச்சேனை – வாகனேரி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளது.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக உயிரிழந்த பெண்ணின் மருமகன் அவரை, கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், குறித்த சந்தேகநபர் கடந்த 10ஆம் திகதி உயிரிழந்த பெண்ணின் கணவரையும் கொலைச் செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பின்னர் அவர், காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், தற்போது சந்தேகநபர் தப்பியோடியுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.