வாகன உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தில் தீப்பரவல்
கொழும்பு – பஞ்சிகாவத்தை பகுதியில் வாகன உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு – பஞ்சிகாவத்தை பகுதியில் வாகன உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
நேற்றிரவு ஏற்பட்ட இந்த தீப்பரவல் காரணமாக அருகிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருதானை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக 6 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.