தாயகத்தில் பரிதாபகரமாக பறிபோன இளம் தாயின் உயிர்

யாழ்ப்பாணத்தில் குழந்தை பிரசவித்த இளம் தாய் ஒருவர் நேற்றைய தினம்பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தாயகத்தில் பரிதாபகரமாக பறிபோன இளம் தாயின் உயிர்

யாழ்ப்பாணத்தில் குழந்தை பிரசவித்த இளம் தாய் ஒருவர் நேற்றைய தினம்பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மாதகல் மேற்கு பகுதியைச் சேர்ந்த அருள்டிசாந்தன் கொலஸ்ரிகா (வயது 28) என்ற இளம் தாயே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்த நிலையில் அவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இதன்போது அவருக்கு கடந்த 23 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 24 ஆம் திகதி வீடு திரும்பியுள்ளார்.

அதன்பின்னர் அவருக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை குழந்தை பிறந்து இரண்டு மணித்தியாலங்களில் உயிரிழந்துள்ளது.

இந்நிலையில் குறித்த பெண் தொடர்ச்சியாக வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.