கழுத்து நெரிக்கப்பட்டு சிறுமி கொலை - சந்தேகநபர் மீண்டும் மன்றிட்கு!
மன்னாரில் 10 வயதுடைய சிறுமியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை இன்று மன்னார் நீதவான் நீதிமன்றில்
மன்னாரில் 10 வயதுடைய சிறுமியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை இன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் மீண்டும் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் குறித்த நீதிமன்றத்துக்கு முன்பாக, சம்பவத்தை கண்டித்தும், சந்தேகநபருக்கு எதிராகவும் பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த 10 வயதுடைய சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் கடந்த சனிக்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அதன்போது, காவல்துறையினரின் கோரிக்கைக்கு அமைய அவரை 48 மணிநேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதவான் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.