டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட மாட்டார் கோலி 

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியிருந்த  

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட மாட்டார் கோலி 

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியிருந்த  மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இதற்கு முன்னர் இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விராட் கோலி விளையாடியிருக்கவில்லை.

இந்தநிலையில், அவர் இங்கிலாந்து அணியுடனான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுவாரா? என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக இந்திய விளையாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி இங்கிலாந்து தொடர் ஆரம்பிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்தார்.