ஜனாதிபதி அவுஸ்திரேலியாவிற்கு விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி அவுஸ்திரேலியாவிற்கு விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்திய மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் நிமித்தம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவிற்கு பயணித்துள்ளார்.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நாளை மற்றும் நாளை மறுதினம் 7ஆவது இந்து சமுத்திர மாநா இடம்பெறவுள்ளது.

இந்த மாநாட்டில் இலங்கைக்கான முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதி முக்கிய உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவுஸ்திரேலிய பிரதமர், அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.