டி20 போட்டிகளில் அதிவேக சதம் இன்று
நேபாளம் - நமீபியா அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் நமீபியா அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
நேபாளம் - நமீபியா அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் நமீபியா அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
இந்நிலையில் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நமீபியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்களை குவித்தது.
துடுப்பாட்டத்தில் நமீபியா அணியின் லோஃப்டி-ஈடன் (Loftie-Eaton) அதிரடியாக 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
33 பந்துகளில் லோஃப்டி-ஈடன் பெற்ற குறித்த சதம் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் பெறப்பட்ட அதிவேக சதமாக பதிவாகியுள்ளது.