திமுத் கருணாரத்னவிற்கு கிடைத்த புகழ்
கடந்த ஆண்டுக்கான ஐ.சி.சி ஆடவர் டெஸ்ட் அணியில் இலங்கையின் முன்னாள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணித்தலைவரான திமுத் கருணாரத்ன இடம்பிடித்துள்ளார்.
கடந்த ஆண்டுக்கான ஐ.சி.சி ஆடவர் டெஸ்ட் அணியில் இலங்கையின் முன்னாள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணித்தலைவரான திமுத் கருணாரத்ன இடம்பிடித்துள்ளார்.
இதற்கமைய திமுத் கருணாரத்ன கடந்த ஆண்டில் 6 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடியிருந்தார்.
இருப்பினும் கடந்த ஆண்டின் சிறந்த வீரர்களை கொண்டு பெயரிடப்பட்டுள்ள டெஸ்ட் அணியில் திமுத் கருணாரத்ன இடம்பெற்றுள்ளார்.
மேலும் அவுஸ்திரேலிய அணித்தலைவர் பெட் கம்மின்ஸ் தலைமையிலான குறித்த குழாமில் உஸ்மான் கவாஜா, திமுத் கருணாரத்ன, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ட்ராவிஸ் ஹெட், ரவீந்திர ஜடேஜா அலெக்ஸ் கேரி, ரவிச்சந்திரன் அஸ்வின், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஸ்டூவர்ட் ப்ரோட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.