மக்களே அவதானம்! கொழும்பில் பாரிய மோசடி
கொழும்பு நகரில் சொந்தமாக வீடுகளை பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு நகரில் சொந்தமாக வீடுகளை பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையில் கொழும்பு மோதர ஹெலமுத்து அடுக்குமாடி குடியிருப்பில் வீடொன்று வழங்கப்படவுள்ளதாக கூறி ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைதொடர்ந்து பெண் ஒருவரை ஏமாற்றி 15 லட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்ட நபர் ஒருவரையே கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
நகர அபிவிருத்தி அதிகாரசபை வழங்கியது போன்ற போலியான ஆவணங்களையும் இந்த நபர் இந்த பெண்ணிடம் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வகையில் கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை தருவதாக கூறி மக்களை ஏமாற்றி பல பண மோசடி வழக்குகள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.