மலையக மக்களில் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை

இலங்கையில் பெருந்தோட்ட தேயிலைக் கைத்தொழில் முறைமைக்குப் பதிலாக தேயிலை சிறு தோட்ட முறைமையொன்றினை ஏற்படுத்துதல்

மலையக மக்களில் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை

இலங்கையில் பெருந்தோட்ட தேயிலைக் கைத்தொழில் முறைமைக்குப் பதிலாக தேயிலை சிறு தோட்ட முறைமையொன்றினை ஏற்படுத்துதல் என்ற தலைப்பில் நாடாளுமன்றில் இன்று தனிநபர் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் இந்த பிரேரணையை முன்வைத்துள்ளார்.

இந்நிலையில் , குறித்த பிரேரணையை வழிமொழிந்து கருத்துரைத்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பெருந்தோட்ட மக்களின் ஊடாகவே நாட்டுக்கு அதிகளவான அந்நிய செலாவணி கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.

இதன்படி. குறித்த மக்கள் உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்குறிப்பிட்டுள்ளார்.

அந்த மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

ஒவ்வொரு முறையும் வேதனம் அதிகரிக்கப்படுமென இடம்பெறுகின்ற அரசியல் நாடகங்களில் சிக்கிக்கொள்ளும் அந்த மக்கள் நாட்டுக்காக பாரிய சேவையாற்றி வருகின்றனர்.