தீப்பரவலினால் பல ஏக்கர் சேதம்
ஹட்டன் - ருவன்புர பகுதியில் அடையாளம் தெரியாதோரால் பாதுகாப்பு வனப்பகுதிக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் - ருவன்புர பகுதியில் அடையாளம் தெரியாதோரால் பாதுகாப்பு வனப்பகுதிக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
இந்த தீப்பரவலினால் பல ஏக்கர் காணிகள் தீக்கிரையாகியுள்ளன.
தீப்பரவலினால், அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள், மூலிகை செடிகள் உட்பட அனைத்தும் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மை காலமாக தொடர்ந்தும் வனப்பகுதிகளுக்கு தீவைக்கப்படுவதனால் காட்டு விலங்குகள் உணவு தேடி பொதுமக்களின் இருப்பிடங்களுக்கு வரக்கூடிய அபாயமும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் உயிரினங்களுக்கும் பொது மக்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உருவாகக்கூடிய வாய்ப்பும் காணப்படுகின்றது.