பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தனியார் நிறுவனம் ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை

பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை நடத்த பேருந்தில் ஏறிய பெண் பொலிஸ்உத்தியோகத்தர் ஒருவரை தனியார் நிறுவனம் ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் பாலியல் துஷ்பிரயோகம்செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நுவரெலியா நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த பின்னர் எதிர்வரும்22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வெலிமடை பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பாதுகாப்புஅதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடு தழுவிய யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து பொது போக்குவரத்து சேவைகளில் பயணிக்கும்பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்கும் நோக்கில்மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.