TNAயின் புதிய தலைவரிடம் M.A.சுமந்திரன் வேண்டுகோள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாட்டை விரைவில் நடத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினருமான M.A.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

TNAயின் புதிய தலைவரிடம் M.A.சுமந்திரன் வேண்டுகோள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாட்டை விரைவில் நடத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினருமான M.A.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த வேண்டிகோளை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறிதரனுக்கு கடிதம் ஒன்றின் மூலம் முன்வைத்துள்ளார்.

இந்நிலையில் தேசிய மாநாட்டையொட்டி கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும் இந்த கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

இதனைதொடர்ந்து இலங்கை தமிழரசுக் கட்சி வரலாற்றில் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட தலைவர் எனும் அடிப்படையில், பதவியேற்வு விழா வைபவ ரீதியாக நடைபெற வேண்டியது கட்டாயமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்,  காலம் தாழ்த்தாது பகிரங்க பொது நிகழ்வை நடத்துமாறு தமிழரசுக் கட்சியின் முன்னாள் பிரதி பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான M.A.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.