ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நபர் மர்ம மரணம்

ஹிக்கடுவ - வேவல பகுதியில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நபர் மர்ம மரணம்

ஹிக்கடுவ - வேவல பகுதியில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.

வறகொட, களனி பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஹிக்கடுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பின்னர், பொலிஸாரும், ஹோட்டேல் ஊழியர்களும் அந்த நபர் தங்கியிருந்த அறையின் ஜன்னலைத் திறந்து பார்த்தபோது, ​​குளியலறையில் இரத்தக் காயங்களுடன் நபர் இறந்து கிடந்தார்.

சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹிக்கடுவ பொலிஸார் மரணம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.