கொலை செய்ய முயற்சித்த இரு சந்தேகநபர்கள் கைது
கொலை செய்ய முயற்சித்த இரு சந்தேகநபர்களை கைது
அம்பலாங்கொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரொருவரை படுகொலை செய்ய முயற்சித்த இரு சந்தேகநபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து கைத்துப்பாக்கியும், அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.