சுதந்திர தின நிகழ்வு ஒத்திகையின் போது ஏற்பட்ட விபத்து

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுக்க காலி முகத்திடலில் இடம்பெற்று வரும்  ஒத்திகை நிகழ்வின் போது ஏற்பட்ட அனர்த்தத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

சுதந்திர தின நிகழ்வு ஒத்திகையின் போது ஏற்பட்ட விபத்து

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுக்க காலி முகத்திடலில் இடம்பெற்று வரும்  ஒத்திகை நிகழ்வின் போது ஏற்பட்ட அனர்த்தத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பெரசூட் சாகச ஒத்திகையின் போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அனர்த்தத்திற்குள்ளானவர்களில் இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், மேலும் இருவர் நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களில் இரண்டு இராணுவத்தினரும், இரண்டு விமானப்படையினரும் அடங்குகின்றனர்.

அவர்கள் அனைவருக்கும் சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காலி முகத்திடல் பகுதியில் ஒத்திகை இடம்பெற்று வருவதுடன், இதற்காக விசேட போக்குவரத்து திட்டமும் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.