சாம்சங் நிறுவனத்தின் புதிய சலுகை

சாம்சங் நிறுவனமானது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் புதிய சலுகை

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் நிறுவனமானது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது Samsung Neo QLED, OLED மற்றும் 4K UHD வகை டிவி மொடல்களை வாங்குவோருக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஜனவரி 31ஆம் திகதி வரை The Future Best என்ற பெயரில் அறிவிக்கப்பட்டிருக்கும் சிறப்பு விற்பனையில் இச்சலுகைகள் அடங்கும்.

Cinematic Audio Visual, Neural AI Quantum Processor மற்றும் AI Upscaling போன்ற வசதிகள் உள்ளடக்கப்படுகின்றது.

இதன்மூலம் படத்தின் தரத்தை 4K மற்றும் 8K பட வெளியீட்டிற்கு மேம்படுத்த முடியும்.

மேலும் Motion Xcelerator Turbo+ அம்சத்துடன் கேமிங்கை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெரிய திரை கொண்ட டிவி-க்களை வாங்கும் போது 1 லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட Samsung Galaxy S23 Ultra ஸ்மார்ட்போன், 69 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள QLED 4K டிவி மற்றும் 37 ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்ட Wireless Sound Bar உள்ளிட்ட நிச்சய பரிசுகள் அறிவிக்கப்ட்டுள்ளன.