நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி
இன்றைய போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறுகின்றது.
இந்த போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறுகின்றது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கமைய, அந்த அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இவ்விரு அணிகளுக்குமிடையிலான இரு இருபதுக்கு20 போட்டிகளில், இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1க்கு 1 என்ற அடிப்படையில் சமனிலை வகிக்கின்றன.
இந்தநிலையில், இரண்டு அணிகளுக்கும் இன்றைய போட்டி தீர்மானமிக்க போட்டியாக அமைந்துள்ளது.