நிலவில் சாகசம் காட்டிய ஜப்பான்
ஜப்பான் விண்கல ஆய்வான 'ஸ்லிம்', நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் விண்கல ஆய்வான 'ஸ்லிம்', நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய ஐந்தாவது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது.
இந்நிலையில் நிலவை ஆய்வு செய்வதற்காக 'ஸ்லிம்' என்ற விண்கலத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி ஜப்பான் விண்ணுக்கு ஏவியுள்ளது.
நிலவை 120 முதல் 180 நாட்களில் இந்த விண்கலன் அடையும் வகையில் அதன் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் தனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து ஸ்லிம் எனும் ஸ்மார்ட் லேண்டர் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த பணியில் ஜப்பான் விண்வெளி ஆய்வு மையத்துக்கு அமெரிக்காவின் நாசா நிறுவனம் உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.