மோடியின் ஸ்ரீரங்க விஜயம்! மவுத் ஆர்கன் வாசித்து வரவேற்ற ஆண்டாள் யானை
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக தமிழகம் சென்ற நிலையில் இன்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் சாலையின் இரு புறங்களும் பாஜகவினரும், பொதுமக்களும் திரளாக நின்று பிரதமர் மோடிக்கு மலர்த்தூவி வரவேற்றுள்ளனர்.
பிரதமர் மோடியின் வருகையை வரவேற்று பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனத்தில் ஈடுபடுள்ளார்.
இதன்போது ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாளிடமும் ஆசிர்வாதம் பெற்றார். அப்போது, பிரதமரை வரவேற்கும் வகையில் ஆண்டாள் யானை மவுத் ஆர்கன் வசித்துள்ளமை எல்லோரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.