செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டி படலம்  கண்டுப்பிடிப்பு

சுமார் 3.7 கிலோமீட்டர் தொலைவிற்கு செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டி படலம் இருப்பதாக கண்டுபிடிப்பு

 செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டி படலம்  கண்டுப்பிடிப்பு

சுமார் 3.7 கிலோமீட்டர் தொலைவிற்கு செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டி படலம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

இந்த பனிக்கட்டி படலம் உருகினால் அந்த கிரகத்தில் 8.9 அடி ஆழத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என கூறப்படுகின்றது.

இதுபோன்ற நீராதாரம் கண்டறியப்படுவது முதல்முறை இல்லையென்றாலும் தற்போது கண்டறியப்பட்டுள்ள நீரின் அளவுதான் இதுவரை கண்டறியப்பட்டதிலேயே அதிகபட்சம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.