இணையதளம் மற்றும் மொபைல் போன் சேவைகள் நிறுத்தம்

இணையதளம் மற்றும் மொபைல் போன் சேவையை நிறுத்த பாகிஸ்தான் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இணையதளம் மற்றும் மொபைல் போன் சேவைகள் நிறுத்தம்

இணையதளம் மற்றும் மொபைல் போன் சேவையை நிறுத்த பாகிஸ்தான் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இன்றைய தினம் தேர்தல் நடைபெறும் காரணத்தினால் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ஏற்படக்கூடிய அமைதியின்மை மற்றும் பயங்கரவாதச் செயல்கள் மற்றும் தேர்தலின் மூலம் ஏற்படக்கூடிய எதிர்பாராத அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இதன் மூலம் சுமார் 241 மில்லியன் மக்களைக் கொண்ட பாகிஸ்தானியர்களின் உரிமைகள் மீறப்படும் என பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.