728 சந்தேக நபர்கள் கைது 

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் 728 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 728 சந்தேக நபர்கள் கைது 

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் 728 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 558 சந்தேக நபர்களும் குற்றவியல் பிரியவிற்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்த 170 சந்தேக நபர்களும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 122 கிராம் ஹெரோயின், 101 கிராம் ஐஸ், 5 கிலோ 217 கிராம் கஞ்சா மற்றும் 1,852 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.