இலங்கை மக்களுக்கு அவசர செய்தி
அரசாங்க மருத்துவர்கள் நாளை காலை 8 மணி முதல் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு
அரசாங்க மருத்துவர்கள் நாளை காலை 8 மணி முதல் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கப்பட்ட இடர்கால மற்றும் போக்குவரத்து (DAT) கொடுப்பனவை அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தியதை எதிர்த்து இந்த காலவரையற்ற வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட மேலதிக கொடுப்பனை தமக்கும் வழங்குமாறு கோரி வைத்தியசாலை பணிப்பாளர்கள் உள்ளிட்ட பல சங்கங்கள் இணைந்து கடந்த நாட்களில் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனால் வைத்தியசாலைகளில் சேவைகளை பெற்றுக்கொள்ளச் சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் திம்பியிருந்தனர்.
இந்த நிலையில் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பால் நாளை மக்கள் பெரும் இன்னல்களுக்கு முக்ம்கொடுக்கவுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.