பிக்கு ஒருவர் சுட்டுக் கொலை - மீண்டும் பதற்றம்
கம்பஹா, மல்வத்து ஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் உள்ள பௌத்த பிக்கு மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
கம்பஹா, மல்வத்து ஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் உள்ள பௌத்த பிக்கு மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 44 வயது கலபலுவானே தர்மரத்ன தேரர் என்ற பிக்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காரில் வந்த நால்வர் கொண்ட குழுவினரே இந்த துப்பாக்கிச் சுட்டை மேற்கொண்டு விட்டு, தப்பிச் சென்றுள்ளனர்.
சந்தேக நபர்ககளை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நேற்றைய தினம் ஐவர் சுட்டுக்கொள்ளப்பட்ட நிலையில், இன்று பிக்கு மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சற்று பதற்றத்தில் உள்ளனர்.