ETF & EPF இற்கு பாதிப்பு?
நாட்டில் உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை
நாட்டில் உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினர்களுக்கு பாதகம் ஏற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான மனுக்கள் எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த மனுக்களை விசாரணை செய்யாமல் நிராகரிப்பதற்கு அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைப்பதாக தெரிவித்தார்.
இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுக்களை விசாரணை செய்வதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தனது அடிப்படை ஆட்சேபனையில் குறிப்பிட்டுள்ளார்.