அதிருப்தியடைந்த இந்தியா
உலக வா்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) கூட்டமொன்றில் கருத்து தெரிவித்த தங்கள் நாட்டு தூதுவர் ஒருவரை தாய்லாந்து அரசு அவரது பதவியில் இருந்து நீக்கியுள்ளது.
இந்தியாவிற்கு எதிராக, உலக வா்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) கூட்டமொன்றில் கருத்து தெரிவித்த தங்கள் நாட்டு தூதுவர் ஒருவரை தாய்லாந்து அரசு அவரது பதவியில் இருந்து நீக்கியுள்ளது.
குறித்த தூதுவரின் இந்திய அரசு அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், இந்த தீர்மானத்தை தாய்லாந்து அரசு எடுத்துள்ளது.
உலக வா்த்தக அமைப்பின் அமைச்சா்கள் நிலையிலான கூட்டம் அபுதாபியில் கடந்த பெப்ரவரி 26 முதல் 29 ஆம் திகதி வரையும் நடைபெற்றுள்ளது.
அதன்போது, உலக வா்த்தக அமைப்புக்கான தாய்லாந்து நாட்டின் பெண் தூதா் பிம்சனாக் வோன்கொா்போன் என்பவர், “இந்தியாவில் குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற பெயரில் விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு அரிசியை கொள்முதல் செய்வது, பொது விநியோகத் திட்டத்தில் அந்நாட்டு மக்களுக்கு வழங்குவதற்காக அல்ல.
அரிசி ஏற்றுமதி சந்தையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம்”எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.