கடுவலையில் துப்பாக்கிச்சூடு

கடுவலை - நவகமுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கடுவலையில் துப்பாக்கிச்சூடு

கடுவலை - நவகமுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள வணிக நிறுவனமொன்றை இலக்கு வைத்து இன்று காலை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உந்துருளியில் பயணித்த அடையாளம் தெரியாத இரண்டு சந்தேக நபர்களினாலேயே இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக சிசிடிவி கெமரா காட்சிகள்   மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுவலை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.