பெலியத்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் வெளியாகிய தகவல்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்த பகுதியில் ஐவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சில திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்த பகுதியில் ஐவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சில திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது
இந்நிலையில் கைதான சந்தேகநபரான சமன் குமாரவை நாளை வரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தெய்யந்திர நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் சந்தேகநபர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், சந்தேகநபர்கள் பயணித்த வாகனத்தை குறித்த நபர் செலுத்தியதாக கூறப்படுகின்றது.
குறித்த குற்றச்செயலுக்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு T-56 ரக துப்பாக்கிகள் கொண்டு செல்லப்பட்ட உந்துருளியையும், சந்தேகநபர்கள் தப்பிச் செல்லும் நோக்கில் பயன்படுத்திய மற்றுமொரு சிற்றூர்ந்து காவல்துறையினால் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகநபரான சமன் குமார காவல்துறையினால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.