சுற்றுலாப் பயணிகளின்வருகை 2.5 மில்லியனைத் தாண்டும்

சுற்றுலாப் பயணிகளின்வருகை 2.5 மில்லியனைத் தாண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்

சுற்றுலாப் பயணிகளின்வருகை 2.5 மில்லியனைத் தாண்டும்

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக 2024 ஆம் ஆண்டில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின்வருகை 2.5 மில்லியனைத் தாண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையைகருத்தில் கொண்டால் இலக்கை எளிதில் எட்ட முடியும் என்பது தெளிவாகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி முஸ்லிம் வர்த்தகர் சங்கத்தின் 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற வைபவத்தில் பிரதமஅதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.