இலங்கையில் நெதர்லாந்து பெண்ணொருவருக்கு நேர்ந்த கதி

நெதர்லாந்து பெண்ணொருவர் களுத்துறைக்கு வருகை தந்த நிலையில் அவரிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சித்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் பெட்ரோனெல்லா எக்னிடா மரியா என்ற 42 வயதான நெதர்லாந்து பெண் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் முறைப்பாட்டாளரான பெண் வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்ததாக தெரிவித்த பொலிஸார், நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு அறையில் உறங்கிக் கொண்டிருந்த போது சந்தேகநபர் தன்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பெண்ணொருவருடன் தவறானமுறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர் களுத்துறை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.